ப.புஷ்பரட்ணம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப் பேருரைத் தொடரில் நான்காவது ஆண்டாக இடம்பெற்றிருந்த பேருரையின் நுல் வடிவம். தமிழவேள் இ.க.கந்தசுவாமி யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். கொழும்பில் ஆசிரியத்தொழிலை மேற்கொண்ட வேளையில் சுமார் நாற்பதாண்டுகள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் தன்னைப் பிணைத்துத் தமிழ்ப் பணியாற்றியவர். முப்பதாண்டுகள் அச்சங்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். இவரது நினைவாக இப்பேருரை 13.11.2013 அன்று அண்மைக்கால தொல்காப்பியக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நல்லூர் இராசதானியும் யாழ்ப்பாணக் கோட்டையும் பற்றிய இம்மீள்வாசிப்பினை மேற்கொண்டிருந்தார்.