10974 நாகர் எழு வன்னி: வன்னியின் வரலாற்றியல் மரபுகள்.

ஞா.ஜெகநாதன். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2013. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், 79, கந்தசாமி கோயில் வீதி).

xiv, 202 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8715-89-5.

1997இல் தொடங்கப்பட்ட வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 25ஆவது நூல் இதுவாகும். ஈழத்தின் ஆதிக்குடிகளும் இலெமூரியாக் கண்டமும், அடங்காப்பற்றின் ஆதிக் குடிகளும் வன்னியர் வருகையும், வன்னியர் தோற்றமும் ஈழத்து வன்னிமைகளும், அடங்காப்பற்றும் வன்னிச் சிற்றரசுகளும், ஆக்கிரமிப்பும் பண்டாரவன்னியனும், வன்னியரும் ஈழத்து முஸ்லிம்களது தொடர்புகளும், எதிர்காலத்தை நோக்கி வன்னியர் ஆகிய ஏழு பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக, வன்னியின் பாரம்பரிய கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், நாம் வாழும் நாகநாடு, வன்னித் தமிழரின் தொல்குடி மரபுகள் ஆகிய மூன்று கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் ஞானப்பிரகாசம் ஜெகநாதன் வவனியா, சின்னத்தம்பனையில் பிறந்தவர். வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் செட்டிகுளம் பிரதேசத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்