10975 புதிய வெளிச்சங்கள்.

மானா மக்கீன். தஞ்சாவூர் மாவட்டம்: ஜம் ஜம் பதிப்பகம், பாத்திமா மன்ஸில், 492, ரஹ்மானியா தெரு, சக்கராப்பள்ளி 614211, 1வது பதிப்பு, ஜனவரி, 2014. (சென்னை 600 014: ஏ.கே.எல்.பிரிண்டர்ஸ், ராயப்பேட்டை).

128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் வாழ்ந்தபோதிலும், தமிழகத்துடன் கொண்ட தொடர்பினால் தமிழகத்து இஸ்லாமியத் தமிழ் ஊர்களான கீழக்கரை, காயல்பட்டினம், நீடூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களின் வரலாற்றையும் பாரம்பரியச் சிறப்பினையும் ஆவணப்படுத்திய பெருமை மானாமக்கீனுக்குரியது. அவ்வகையில் இந்நூலில் தஞ்சை மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பிரதேசத்தின் புகழையும், வரலாற்றையும் பெருமையுடன் ஆவணப்படுத்தியிருக்கிறார். அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி புராதன வரலாறு, முஸ்லிம்கள் அங்கு குடியேறிய காலம், அய்யம்பேட்டை முஸ்லிம்களுக்கும் இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்புகள், சன்மார்;க்க, சமூக, அரசியல்துறைகளில் அவ்வூர் மக்களின் ஈடுபாடு, சேவை என்பன இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13573 கடல் ஒருநாள் எங்கள் ஊருக்குள் வந்தது.

ஏ.பீர்முகம்மது. சாய்ந்தமருது 3: கல்முனை கலை இலக்கியப் பேரவை, 400 B, மாவடி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சாய்ந்தமருது: ரோயல் ஓப்செட் பிரின்டர்ஸ், பிரதான வீதி). vi, 10 பக்கம், விலை: