டப்ளின் தீர்ப்பாயம் (ஆங்கில மூலம்), பூங்குழலி (தமிழாக்கம்). தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் 2010 ஜனவரி 14-16திகதிகளில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) விசாரணைசெய்து இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி எனவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமை உண்மை எனவும் மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பின் முழு வடிவமும் முன்னர் ‘தலித் முரசு’ பெப்ரவரி 2010 இதழில் பூங்குழலி அவர்களின் தமிழ்மொழியாக்கத்தில் வெளியிடப்பட்டது. டப்ளின் (அயர்லாந்து) தீர்ப்பாயத் தீர்ப்பின் முழுவடிவம் இங்கு மீண்டும் நூலுருவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்: ஓர் அறிமுகம், குற்றச்சாட்டுக்கள், போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முறிவும், போரின் இறுதி வாரங்களில் நடைபெற்ற அட்டூழியங்கள், ஆவணங்களின் திறனாய்வு, பரிந்துரைகள், இறுதிக் குறிப்புகள், நிகழ்ச்சி நிரல், அநீதியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத்தமிழர்களின் உரிமைகள் ஆகிய 10 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.