கி.இலக்குவன். சென்னை 600 018: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2015. (சென்னை 5: கணபதி எண்டர்பிரைசஸ்).
288 பக்கம், விலை: இந்திய ரூபா 260., அளவு: 21×14 சமீ.
சமத்துவமும் சுயமரியாதையும் உடைய கௌரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடிவரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி உள்ளது உள்ளவாறு விளக்கும் கி.இலக்குவனின் நூல். ஸ்ரீரங்கத்தில் பிறந்த கி.இலக்குவன் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றி, அதன் தொழிற்சங்கத்தில் முன்னணித் தலைவராக விளங்கியவர். அரசியல், பொருளாதாரம், தொழிற்சங்கம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் தந்துள்ளார். புராதன இலங்கையில் தமிழர்கள், அன்னியரது ஆக்கிரமிப்பில் இலங்கை, சிங்கள தமிழ் தேசியவாதங்களின் தோற்றம், தமிழர்களின் குடியுரிமை மீது தாக்குதல், இலங்கை அரசியல் கட்சிகள், தமிழர் நலன்களின்மீது தொடர் தாக்குதல்கள், அறவழிப் போராட்டத்திலிருந்து ஆயதவழிப் போராட்டத்திற்கு, போராளிக் குழுக்களின் தோற்றம், 1981 தொடங்கி இந்தியத்தலையீடு வரையிலான கால நிகழ்வுகள், இந்தியத் தலையீடு, விடுதலைப் புலிகள் குறித்த சில விமர்சனங்கள், இரண்டாம் ஈழப்போர், மூன்றாம் ஈழப்போர், எல்.டி.டி.ஈயில் பிளவு, 2004- நாடாளுமன்றத் தேர்தல்கள், ஆழிப் பேரலை- 2004 டிசம்பர், லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை, சுருக்கப்பட்ட தமிழ் ஈழம், நான்காம் ஈழப்போர் (இறுதிப்போர்), போருக்குப் பிந்தைய சூழல், தொகுப்புரை ஆகிய 21 பகுதிகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.