10981 ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு: பகுதி 1.

பாவை சந்திரன். சென்னை 600 017: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (சென்னை 600 014: அஷ்வின் பிரிண்டிங் ஏஜென்சி).

xxxii, 464 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 700. (இரு பாகங்களும்), அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-89708-27-6.

கடந்த 30 ஆண்டு அறவழிப் போராட்டகாலத்தையும், தொடர்ந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்தையும் உள்ளடக்கிய ஈழத் தமிழரின்; போராட்டத்தின் வரலாறு இரண்டு பாகங்களில் எழுதப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரின் ஆதி வரலாறு விஜயனின் வருகைக்கு முன்னரே தொடங்கிற்றென்றும், தமிழர் ஆட்சிக் காலங்கள் பற்றியும், தமிழகத்துடனான தொடர்புகள் பற்றியும், 1619இல் போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் தமிழரின் மன்னராட்சி முடிவுக்கு வந்தமை பற்றியும், தொடர்ந்து வந்த ஒல்லாந்தர், பிரித்தானியர் படையெடுப்புகள் பற்றியும் அவை தமிழ் மக்களின் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமை பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காக தமிழ்ப் பிரதேசங்களை சிங்களப் பிரதேசங்களுடன் இணைத்து ஒற்றை ஆட்சிக்குட்படுத்தியமை, 1948இல் சுதந்திரம் அடைந்தமை, மலையகத்தமிழர் குடியுரிமை இழத்தல், 1956இன் தனிச்சிங்களச் சட்டம், இனக்கலவரங்கள், கல்வியில் தரப்படுத்தல், தமிழர் அரசியல் கட்சிகளின் சமஷ்டித் தீர்வு முனைப்பு, யாழ் நூலக எரிப்பு என்று தொடர்ந்து 1983 இனப்படுகொலையுடன் தமிழ் இளைஞர்கள் ஆயதமேந்தியமை வரை ஈழத்தமிழரின் வரலாறு இப்பாகத்தில் 30 அத்தியாயங்களில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்