பாவை சந்திரன். சென்னை 600 017: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (சென்னை 600 014: அஷ்வின் பிரிண்டிங் ஏஜென்சி).
viii, 465-912 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 700. (இரு பாகங்களும்), அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-89708-27-6.
கடந்த 30 ஆண்டு அறவழிப் போராட்டகாலத்தையும், தொடர்ந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்தையும் உள்ளடக்கிய ஈழத் தமிழரின் போராட்டத்தின் வரலாறு இரண்டு பாகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டாம் பாகத்தில் 31ஆவது அத்தியாயத்திலிருந்து 57வது அத்தியாயம் வரை எழுதப்பட்டுள்ளது. இதில் ஜே.ஆர். ஜெயவர்த்தன கால அரசியல் முனைப்பு, இந்திய-இலங்கை ஒப்பந்தச் சூழல், பிரபாகரனின் சுதுமலைப் பேச்சு, இந்திய அமைதிப்படைக் காலம், பிரேமதாசவின் நயவஞ்சக அரசியல், பத்மநாபா மீதான தாக்குதல், புலிகள்-முஸ்லிம்கள் உறவு, ராஜீவ் காந்தி படுகொலை, ஆனையிரவுப் போர், யாழ்ப்பாணத்தில் புலிகள் நிர்வாகம், விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை, கிட்டுவின் உயிர்த் தியாகம், சந்திரிகாவின் ஆட்சிக்காலம், பேச்சுவார்த்தை, மூன்றாம் ஈழப்போர், நோர்வேயின் சமாதான முயற்சி, புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகத் திட்டம், புலிகளைத் தாக்கியஆழிப் பேரலை, மகிந்த ராஜபக்ஷ காலம், மாவிலாறு அணைப் பிரச்சினை, வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை மறுத்தது, நான்காம் கட்ட ஈழப்போர், பிரபாகரனின் மாவீரர் தின உரை என முள்ளிவாய்க்கால் அவலம் வரை இவ்வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது.