10986 உலகத் தமிழ்த் தந்தை தனிநாயகம் அடிகளார்.

எம்.இலியாஸ் (தொகுப்பாசிரியர்). சிங்கப்பூர்:  தமிழவேள் நற்பணி மன்றம், செம்மொழி பப்ளிக்கேஷன்ஸ், 140, டன்லொப் வீதி, சிங்கப்பூர் 209458, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

தமிழவேள் கோ.சாரங்கபாணி (20.4.1903-16.3.1974) அவர்களின் 110ஆவது பிறந்தநாள நினைவாக சிங்கப்பூரில் இயங்கும் தமிழவேள் நற்பணிமன்றத்தால் 20.4.2013அன்று சிங்கப்பூர் அங் மோ கியோ பொது நூலகத்தில் இடம்பெற்ற விழாவில் தமிழவேளின் 110ஆவது நூற்றாண்டுவிழாவும், ப.தியாகராஜனின் ‘தமிழவேளும் நானும்’ என்ற நூல்வெளியீட்டு விழாவும், தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கும் ஒருங்கே இடம்பெற்றன. அன்றையதினம் கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட உரைகளின் தொகுப்பு இந்நூலாகும். வாழ்த்துரை, தனிநாயகம் ஒரு தனி நாயகம் (பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன்), நூற்றாண்டு விழா நாயகர் தனிநாயக அடிகளார் (எம்.இலியாஸ்), செம்மொழிச் சிற்பி ஆகிய தலைப்புகளில் முதலாவது பிரிவும், தொடர்ந்து மூன்று ஆய்வரங்கக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தூதர் பேராசிரியர் தனிநாயக அடிகளார் (பேராசிரியர் அ.வீரமணி), தரணியெங்கும் தமிழ் பரப்பிய தனிநாயகம் அடிகளார் (செ.ப.பன்னீர்செல்வம்), தமிழுக்குக் கிடைத்த தவப் புதல்வர்கள் (எம்.துரைராஜ்) ஆகிய கட்டுரைகள் இப்பிரிவில் இடம்பெறுகின்றன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 233175).

ஏனைய பதிவுகள்