M.A.அப்பாஸ். சென்னை 01: நவபாரத் பதிப்பகம், தபால் பெட்டி நிர். 1647, 3வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, ஜுன் 1953, 2வது பதிப்பு, ஜுலை 1953. (சென்னை: ஏ.பீ.ஜே. அச்சகம்).
162 பக்கம், விலை: இந்திய ரூபா 2.80, அளவு: 17.5×12.5 சமீ.
இலங்கை-இந்தியர் பிரச்சினையை வைத்து இலங்கை-இந்தியர்களின் இன்னல்களை சரித்திரத்தோடு பிணைத்து ஓர் சிறந்த நாடகம் ஒன்றை அறிஞர் அப்பாஸ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை, நவபாரத் பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக இந் நாடகநூல் அமைகின்றது. எழுத்தாளர் எம்.ஏ.அப்பாஸ், தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லா ஏர்வாடியைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2047).