சுவாமி விவேகானந்தர் (மூலம்), ஏ.சுப்பிரமணியம் (தமிழாக்கம்). சென்னை 600004: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, 1997. (600004: ஸ்ரீராமகிருஷ்ண மடம் அச்சகம், மயிலாப்பூர்).
viii, 583 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 18×12.5 சமீ., ISBN: 81-7120-750-2.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனை தாபித்த சுவாமி விவேகானந்தரின் பல்பரிமாணம் கொண்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். நரேந்திரநாத் தத்தா என்ற பெயரில் 12.1.1863இல் கல்கத்தாவில் பிறந்த இவர் தனது 39ஆவது வயதில் 4.7.1902இல் மேற்கு வங்காளத்தில் மறைந்தார். 1893 செப்டெம்பர் 11இல் அமெரிக்காவின் சிக்காகோவில் சர்வமத மகாசபையில் இவர் வழங்கிய ஆன்மீக உரை இவரை உலகப் புகழ்பெறவைத்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அங்கிருந்து ஆன்மீக உரைகளை சுவாமி விவேகானந்தர் நிகழ்த்தினார். 1896 டிசம்பர் 30இல் தாயகம் திரும்பிய இவர், 1897, ஜனவரி 15ஆம் நாள் இலங்கைக்கு வந்தார். அங்கே கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஜனவரி 26ம் நாள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிய அவர் தமிழ்நாட்டிலும் வங்காளம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், கிழக்கு வங்காளம் (பங்களாதேஷ்) என்று ஒரு பெரும் பயணத்தையே நிகழ்த்திச் சொற்பொழிவுகளை ஆற்றினார். அவரது சொற்பொழிவுகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட 30 சொற்பொழிவுகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இதிலுள்ள 11 சொற்பொழிவுகள் ஏற்கெனவே இந்திய பிரசங்கங்கள் என்ற பெயரில் 1943இல் வெளியிடப்பெற்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றில் இடம்பெற்றிருந்தது.