மலர் ஆசிரியர் குழு. சென்னை 600018: புத்தகம் பேசுது, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜுலை 2009. (சென்னை 14: பிரின்ட் ஸ்பெஷாலிட்டீஸ்).
320 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 195., அளவு: 25×19 சமீ.
தமிழகத்திலிருந்து வெளியாகும் புத்தகம் பேசுது என்ற நூலியல் சஞ்சிகையின் சிறப்பு மலர். நூல்கள் மற்றும் பதிப்புத்துறை தொடர்பான தமிழக ஈழத்துத் தமிழறிஞர்களின் நூலியல் சார்ந்த கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. தனிமனிதப் பதிப்புகள், பொதுக் கட்டுரைகள், நிறுவனம் சார்ந்த பதிப்புகள், என மூன்று பிரிவகளுக்குள் மொத்தம் 44 ஆய்வுக் கட்டுரைகளும் விவரணக்கட்டுரைகளுமாக இடம்பெற்றுள்ளன. ஆறுமுக நாவலர் 1822-1879 (பொ.வேல்சாமி), ஈழத் தமிழ்ப் பதிப்பலகம்:பிரச்சினைகளும் செல்நெறிகளும் (ந.இரவீந்திரன்), தமிழ்நூற்பதிப்பும் ஆய்வுமுறைகளும் (கார்த்திகேசு சிவத்தம்பி), நூற்றொகை பதிப்புகள் (விருபா-து.குமரேசன்) ஆகியோரின் கட்டுரைகள் இலங்கைசார்ந்ததும் இலங்கையர்களால் எழுதப்பெற்றவையுமாகும்.