பா.இறையரசன். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சீ.ஐ.டீ வளாகம், அடையாறு, தரமணி, 1வது பதிப்பு, 1997. (சென்னை 600033: ஸ்ரீ விக்னேஷ் பிரின்ட்ஸ், 158/5 லேக் வியூ வீதி, மாம்மபலம் தெற்கு, மாம்பலம்).
viii, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21.5×13.5 சமீ.
தனிநாயக அடிகளும் இதழ்களும், இதழ் வெளியீடும் உள்ளடக்கமும், கட்டுரை ஆசிரியர்கள், தனிநாயக அடிகளின் இதழியல் பணி, இதழியல்வழித் தமிழ்ப்பணி ஆகிய ஐந்து இயல்களின் வழியாக Tamil Culture, Journal of Tamil Studies போன்ற இதழ்களின் மூலம் ஆற்றப்பெற்ற தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணிகள் பற்றி விரிவாக ஆய்வுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33435).