பெ.சு.மணி. கொழும்பு 6: இராமகிருஷ்ணா மிஷன், 40, இராமகிருஷ்ணா வீதி, 1வது பதிப்பு, 1994. (சென்னை: கமலசேகரன், கவிதா அச்சகம்).
(10), 256 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12 சமீ.
1994இல் வவுனியாவில் இடம்பெற்ற விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள் நூற்றாண்டு விழாவின்போது வெளியீடு செய்யப்பட்ட நூல். சுவாமி ரங்கநாதானந்தாஜி மகராஜ், சுவாமி ஸ்மரணானந்தாஜி மகராஜ் ஆகியோரின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில் இந்திய தத்துவஞானத்தில் சமயப் பொறையும், பரந்த நோக்கமும், சிகாகோ சர்வமத சபையின் தோற்றம், சிகாகோ பயணத்தின் வித்தும் வளர்ச்சியும், சிகாகோ பயண அனுபவங்களும் சோதனைகளும், சிகாகோ சர்வமத சபையில் வேதாந்தச் சிங்கம், மூன்றாவது சொற்பொழிவு-இந்து சமயம், சர்வமத சபைக்குப் பிறகு, இலங்கையில் சுவாமிஜி, சிகாகோ வீரரின் வரவேற்பில் தமிழகம், தற்காலப் பயன்பாட்டிற்கு சிகாகோ சொற்பொழிவுகள் ஆகிய பத்து இயல்களில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுப் பயணம் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது.