மே பதினேழு இயக்கம். சென்னை: மே பதினேழு இயக்கம், www.May17iyakkam.com, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (தமிழ்நாடு: 13: அச்சக விபரம் தரப்படவில்லை).
75 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.
மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் தமிழகத்தின் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை உரிமையின் நியாயத்தினை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேசத்தினால் மறுக்கபடும் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் சனநாயகபூர்வமான செயல்பாடுகளிலும், அறிவுச்சமூகச் சூழலிலும் செயல்படும் அமைப்பு. இவ்வமைப்பினரால் எழுதப்பெற்றுள்ள இந்நூல் ஊடகச் சுதந்திரம் சார்ந்தது. ‘த இந்து’ பத்திரிகையின் பக்கச்சார்பிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்துத் தருகிறது. பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரண சாசனம், பத்திரிகை தர்மம்-லசந்தவும் இந்த என்.ராமும் (மருதன்), என்.ராம்-வெந்த பன்றியின் கதை (மாதவி), என்.ராமாயணம்: வீதி நாடகம் (சத்யா சாகர்), யாருக்கு தூதுவராக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்? (தினமணி தலையங்கம்), காட்டுமிராண்டி காலத்தவன் இதோ நிற்கிறான் (கவிதை-புகாரி), உயர்தர இதழாளர் என்ற வகையில் ராமுக்குள்ள தகுநிலை (சச்சி சிறீ காந்தா), சீனாவின் இந்தியப் பொதுஜனத் தொடர்பாளர் (டென்சிங் சோனம்), An Open Letter to The Hindu N.Ram (Sonia Jabber and Others), Big Brother Fascination of N.Ram and Nikhil Chakravarthy (Ramachandra Guha), Open Letter to The Hindu: Credibility at Stake, Media Power and the Origins of the Propaganda Model- An Interview with Edward S Herman by Jeffery Klaehn (Appendix 1), Propaganda Techniques (Appendix 2), LINKS to Media Watch Organizations (Appendix 3), ஆகிய 14 ஆவணங்கள் இந்நூலில் இடம்பெற்றள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48473).