செ.சுகுமாரன். சென்னை 600094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் குழந்தைகளின் அறிவு, மனவளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற நல்ல நூல். பாரதியார் பாடல்கள், பாரதியார் கதைகள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளுக்கு உரியவை எவை எனத் தேர்ந்தெடுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். கொழும்புத் தமிழ்ச் சங்கமும் பாரதியார் சங்கமும் இணைந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் 1.6.2012 அன்று நடத்திய பாரதியார்விழாவில் வெளியிடப்பெற்றது.