10999 மாற்றுவெளி ஆய்விதழ்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், எண் 101, எச். பிளாக், முத்துமாரியம்மன் கோவில் தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 2013. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

152 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 24×17 சமீ., ISSN: 0976-1667.

பேராசிரியர் சேவியர் தனிநாயகம் (1913-1980) அவர்களின் நூற்றாண்டு நினைவாக வெளிவரும் சிறப்பிதழ். ஆசிரியர் தலையங்கம், ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது: தமிழியல் ஆய்வின் கதை’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர் சேவியர் தனிநாயகம் (வ.அய்.சுப்பிரமணியம்), கீழைத்தேயவியல்- தமிழியல் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் வகிபாகம் (வீ.அரசு), பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகள் எனும் அரசியல் நுண்ணறிவாளர் (தெ.மதுசூதனன்), தமிழர் பண்பாடு: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் இறுதிச் சொற்பொழிவு (சேவியர் தனிநாயகம்), நிலக்கிடக்கையும் கவிதையியலும்: இயற்கைப் பாடல்களின் ஒப்பீடு (சேவியர் தனிநாயகம்) ஆகிய கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆவணம் என்ற பகுதியில் தமிழ்பேசும் இனத்தார்க்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் கட்டுரையும், பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் ஆக்கங்கள் என்ற தலைப்பில் வி.தேவேந்திரன் அவர்களின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்