வீ.அரசு (சிறப்பாசிரியர்), தெ.சுகுமாரன் (அழைப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், ப.எண் 96, ஜெ.புளொக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2011 (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 24×17 சமீ., ISSN: 0976-1667.
தமிழகத்திலிருந்து வெளிவரும் மாற்று ஆய்விதழின் எட்டாவது இதழ், போருக்குப் பிந்தைய ஈழம் என்ற தலைப்பிலான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில், ஒரே குரல் என்னும் சர்வாதிகாரம் (தலையங்கம்), ஒரு கிராமத்தின் கதை (எல்.சிவலிங்கம்), பாரம்பரியப் பிரதேசங்களும் அரச குடியேற்றத் திட்டங்களும் (ச.சத்தியசீலன்), இலங்கையும் அவசரகாலச்சட்டமும் (செ.துரைசிங்கம்), மே 18இன் பின்னரான சவால்களும் வாய்ப்புகளும் (சிவ.முத்துக்குமார்), போரியல் வாழ்புலமும் சூழலியல் பிரச்சினைகளும் (எம்.மோகனகிருஷ்ணன்), வரலாற்றுப் பிரக்ஞையின் உருவாக்கம் (அர்ஜுன குணரத்ன), இலங்கையும் ஊடகப் பண்பாடும் (துரை.மதங்கன்), தமிழர்களைக் குறிவைக்கும் புதிய இராணுவ நடவடிக்கை (நிராஜ் டேவிட்), நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம் (டி.சிவராம்), தமிழ்த் தேசியம்: சிந்தனையும் தேடலும் (த.சுரேன்), இலங்கையின் இன்றைய பிரச்சினைகள் (பொன்னி அரசு), ஈழத்துப் பெண் கவிஞர்கள் (ரமேஷ்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புத்தக அறிமுகங்களில் பெண் போராளிகள் புதிய பார்வை (அடேல் பாலசிங்கம்), விழுதாகி வேருமாகி: பார்வையும் பதிவும் (அர்த்தநாரீ) ஆகியவையும் ஆவணப் பிரிவில் பூங்குழலி எழுதிய அய்.நா.அவையின் வல்லுநர் குழு அறிக்கை பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இந்த இதழிலுள்ள பதிவுகள் மூலம் போர் முடிந்த பின்பும் மக்கள் புதிய வகையான துன்பங்களுக்கு ஆளாக்கப்படுவதும் சிங்களப் பேரினவாதம் சர்வாதிகாரமாக உருப்பெற்று வருவதையும் அறிய முடிகின்றது.