ஜெயலக்சுமி இராசநாயகம். யாழ்ப்பாணம்: கலாநிதி திருமதி ஜெயலக்சுமி இராசநாயகம், ஜே.ஆர்.திறன், சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 277 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 650., 22×14.5 சமீ., ISBN: 978-955-7421-00-1.
வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கிய நிகழ்வுகளையும் தினங்களையும் கால ஒழுங்கில் விபரிக்கும் நூல். ஜனவரி முதலாம் திகதியில் தொடங்கி, டிசம்பர் 31ம் திகதிவரை வரலாற்றுத் தகவல்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. திகதி வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள இத்தகவல்கள் குறிப்பிட்ட திகதியின்கீழ் ஆண்டுவாரியாகத் தரப்பட்டுள்ளன. இலங்கைவரலாற்றுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும் அதே வேளையில், சமகால ஈழத்து (2015 வரையிலான காலப் பகுதிக்கான) வரலாற்று முக்கியத்துவமான செய்திகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.