சதாசிவம் சச்சிதானந்தம். பாரிஸ்: ஞானா பதிப்பகம் , 1வது பதிப்பு, 2014. (அச்சிட்ட நகரம் தரப்படவில்லை: சிவராம் பிரின்டர்ஸ்).
xxiv, 342 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-1-934293-06-5.
பேராசிரியர் சதாசிவம் சச்சிதானந்தம் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கற்கை நெறிகளுக்கான இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளராகப் பாரிசில் பணிபுரிகிறார். பாரிசில் முதற் தமிழ்ப்பாடசாலையை 1983இல் நிறுவிய இவர் சர்வதேச உயர்கல்வி நிறுவனம் என்ற அமைப்பினை நிறுவி அதன் இயக்குநராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் இவர் எழுதிய 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொழியியல் சார்ந்த தகவல்கள் ஆங்காங்கே செறிந்துள்ள இந்நுலில், சிரிப்புத் தரும் சுகம், மொழிக்குடும்பங்கள், பிரெஞ்சுப் பெண்கள், உரோமத்தின் முக்கியத்துவம், பிரெஞ்சு மொழி ஒரு ஆழ்ந்த அறிமுகம், திராவிடத் தமிழும் இலத்தீனியப் பிரெஞ்சும், பிரெஞ்சு சமுதாயமும் பாலுறவும் என இன்னோரன்ன பரந்துபட்ட தலைப்புகளில் இவரது கட்டுரைகள் அமைகின்றன. பலரும் அறிந்திராத பல்வேறு தகவல்களை விரிவாக இக்கட்டுரைகள் வழங்குகின்றன.