வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2004. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).
120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18.5×13 சமீ., ISBN: 955-8741-03-5.
புலமை வழிகாட்டிகளின் ஆசிரியரான யாதுமூரான் என்ற புனைபெயர் கொண்ட வே.நவமோகனின் மற்றுமொரு தொகுப்பாக்கம் இது. உயிரினங்கள், மனித விலங்கு, தாவரங்கள், உணவுகள், நோய்கள், தினங்கள், நீர், விழாக்கள், காற்று, விளையாட்டுக்கள், பொருட்கள், இசை, கோள்கள், அளவீடுகள், இலங்கை, தமிழ், பலசொல் ஒரு மொழி, மரபுப் பெயர்கள், தாவர மரபுப் பெயர்கள், தொகை நிலைத் தொடர்கள், உலகம், கண்டுபிடிப்புகள், தந்தையர், சிறப்புப் பெயர்கள், அலங்காரங்கள், வர்ணஜாலங்கள், கருவிகள், பொதுவிடயங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட பொது அறிவுக் கேள்விகளும் அவற்றுக்கான சுருக்கப் பதில்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38877).