சி.எம்.ஷபீக், க.சிந்துஜா (தகவல் உதவியாளர்). கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி).
(10), 28 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 28×20.5 சமீ., ISBN: 978-955-8388-98-8.
1901-1940 காலப்பகுதிக்கான நூற்பட்டியல் தொகுப்புப் பணியினை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை முன்னெடுத்துவரும் வேளையில் ஆசிரியர் பற்றிய தகவலை குறிப்பிடும் வேளையில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உதாரணமாக, பழைய தமிழ் நூல்களின் ஒரு நூலாசிரியரை பல்வேறு அடைமொழிகளுடன் காலத்திற்குக்காலம் குறுக்கியும் விரித்தும் குறிப்பிட்டு வருவதால் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாகக் கருதிப் பதிவுசெய்யப்படும் ஆபத்து நேர்ந்து விடுவதுண்டு. உதாரணமாக, அருள்வாக்கி ஆ.பி. அப்துல் காதிறுப் புலவர் அவர்கள், ஆ.பி. அப்துல் காதிறுப் புலவர், அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் என்று பலவாறாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். தேசிய நூலகத்தின் இந்நூலில் அதிகாரபூர்வமான பெயராக அப்துல் காதிர், ஆ.பி. (1866-1918) என்ற பெயரை அவர் எழுதிய அனைத்து நூல்களினதும் பட்டியலாக்கத்தின்போது பயன்படுத்த இப்பட்டியல் அதிகாரமளிக்கின்றது. நூலில் குறிப்பிடப்படும் மற்றைய பெயரை பார்க்க என்று வழிகாட்டிக் குறிப்பின் மூலம் வாசகரின் தேடலை மேலும் இலகுவாக்க முனைந்துள்ளனர். இந்நிலையில் தொகுப்பாளர்களின் வழிகாட்டியாக உதவும் வகையில் மாத்திரமன்றி, நூலகங்களில் பழைய தமிழ் நூல்களைப் பட்டியலாக்கம் செய்யும் வேளையில் உதவும் வகையிலும் இந்த ஆசிரியர் அதிகாரக் கோவை உருவாக்கப்பட்டுள்ளது. பல தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டியதாயினும், முழுமையை நோக்கிய ஒரு முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.