சிற்றம்பலம் முருகவேள். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(57) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
நூலகங்களில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தூவி தசாம்சப் பகுப்பு முறையின் தமிழ் வடிவம். சுருக்கப் பிரிவுகளுடன் தரப்பட்டுள்ளது. மெல்வில் லூயிசு கோசுத் தூவி (Melville Louis Kossuth Dewey, மெல்வில் டூயி, டிசம்பர் 10, 1851-டிசம்பர் 26, 1931) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நூலகவியலாளராவார். தூவி தசம வகைப்படுத்தல் முறையினை அறிமுகப்படுத்தியவர் இவரே. அமரர் சி.முருகவேள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53881).