11021 பத்தாண்டு நிறைவுவிழா மலர்: 1990-2000.

தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம். கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம், இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2000. (மகரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன).

72 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISBN: 955-8383-02-3.

தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம் உருவாக்கம்பெற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் நிறைவுவிழா வெளியீடாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தின் சார்பில் இம்மலரின் உருவாக்கத்தில் உபாலி அமரசிரி அவர்கள் பணியாற்றியுள்ளார். தமிழக்கம் செய்வதில் கமலாம்பிகை கந்தப்பு, துஷ்யந்தி டானியல் ஆகியோர் இயங்கியுள்ளனர். இம்மலரின் உள்ளடக்கமாக கௌரவ ஜனாதிபதியின் செய்தி, கௌரவ பிரதமரின் செய்தி, கௌரவ கல்வி உயர்கல்வி அமைச்சரின் செய்தி, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபைத் தலைவரின் செய்தி, பணிப்பாளர் நாயகத்தின் குறிப்பு ஆகியவற்றுடன் மேற்படி ஆவணவாக்கல் மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளாக, பிரவேசம், தேசிய நூலகச் சேகரிப்பு, வாசகர் சேவை, நூற்பட்டியலாக்கச் சேவை, ஆவணவாக்கல் சேவை, தகவல் தொழில்நுட்ப சேவை, பேணல் புதுப்பித்தல் செயற்பாடு, வெளிக்களத் தொடர்புகள், கலாசாரச் செயற்பாடுகள், ஒழுங்கமைப்பின் வியூகம் ஆகிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25768).

ஏனைய பதிவுகள்