நூலகச் சங்கங்களின் சர்வதேச சம்மேளனம், எஸ்.எம்.கமால்தீன் (தமிழாக்கம்). கொழும்பு 7: ஸ்ரீலங்கா தேசிய நூலகம், சுதந்திர வழி, 1வது பதிப்பு, 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9011-69-3.
நூலகச் சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் IFLA பொதுநூலகப் பிரிவு (International Federation of Library Associations section of Public Libraries) வெளியிட்ட Standards for Public Libraries என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். இது திறமையான பொது நூலக சேவைகளைப் பராமரிப்பதற்கேற்ற ஏற்பாடுகளின் நியமங்களுக்கான அறிவுரையாகும். யுனெஸ்கோ பொது நூலகக் கொள்கை விளக்க அறிவிப்பு, யுனெஸ்கோ கொள்கை விளக்க அறிவிப்பின் அடிப்படையிலான சில பொது விதிகள், நியமங்களின் அவசியம், நிர்வாகத்திற்கும் சேவைக்குமான அலகுகள், நூற்சேர்க்கைக்கான நியமங்கள், கட்புல-செவிப்புல சாதனங்கள், சிறப்புக் குழுக்களுக்கான நியமங்கள், அலுவலர்களுக்கான நியமங்கள், கட்டிடங்களுக்கான நியமங்கள், சிறுவர்களுக்கான நூலக சேவைகள் ஆகிய பிரிவுகளுக்குக்குக் கீழாக இந்த நியமங்கள் வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16413).