M.S.U. அமரசிரி (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலங்கா தேசிய நூலகம், சுதந்திர வழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை).
211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ., ISBN: 955-9011-51-0.
இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை, சுதந்திர வழியில் (சுதந்திரச் சதுக்கத்தை நோக்கிய தெருவில்) தனியான புதிய கட்டிடத்தில் குடியேறிய பின்னர் ஸ்ரீலங்கா தேசிய நூலகமாகப் பெயர்மாற்றம் செய்துகொண்டமையை குறித்து 27.04.1990 அன்று நடந்த சிறப்பு நிகழ்வையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். நூலக சேவைகள் சார்ந்து இருபது கட்டுரைகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் 17 ஆங்கிலக் கட்டுரைகளும், இரண்டு சிங்களக் கட்டுரைகளும், ‘ஸ்ரீலங்கா தேசிய நூலகம்’ என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா நூலக சங்கத்தின் உப தலைவராகப் பணியாற்றிய எஸ்.எம்.கமால்தீன் அவர்களின் தமிழ்க் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20340).