சின்னத்தம்பி சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலை இலக்கிய அவை, மண்டூர், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxxii, 328 பக்கம், விலை: ரூபா: 800., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7202-00-6.
இத்தொகுப்பு நூல், 1948 முதல் 1950 வரை கிழக்கிலங்கையில் மண்டூரிலிருந்து வெளிவந்த ‘பாரதி’ என்ற சஞ்சிகையின் உள்ளடக்கத்தை கட்டுரைகள், சிறுகதைகள், குட்டிக்கதைகள், கவிதைகள், இளைஞர் பகுதி (கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள்), மங்கையர் மன்றம் (கட்டுரைகள், உரையாடல்), பாலர் பகுதி (கதைகள், கவிதைகள்), ஆசிரியர் கருத்துக்கள்-செய்திகள்-கடிதங்கள், பாரதி சஞ்சிகையின் முன்னட்டைப் பக்கங்கள் ஆகிய பிரிவுகளாகப் பகுத்து, அவ்வப்பிரிவுகளுக்குள் உரிய ஆக்கங்களைப் பதிவுசெய்துள்ளனர். இதிலுள்ள படைப்புகளை சிவாஜி, அன்புதாசன், சுமாலி, ராணி, ந.குணரெத்தினம், பாஞ்சாலி, நாகேஸ்பரி, தேவகி, ந.ஜெயமணி, சியாமளா, மு.முத்தையா, எஸ்.கமலாதேவி, பு.ஜோ.ஜெயராஜ், சாவை.த.யோகநாதன், எஸ்.கே.ராஜு, சுத்தானந்த பாரதியார், மூனாக்கானா, சுபமணி, எம்.சோமசுந்தரம்பிள்ளை, ராஜாராம், ஏ.சீ.அன்புதாசன், ஜோஸ், ஜி.எம்.செல்வராஜ், ஏ.பெரியதம்பிப்பிள்ளை, பரமஹம்ஸதாசன், குட்டி, இ.தங்கம்மா, மூர்த்தி, கிரிஜா, வி.சந்திரசேகரம், என்.சாமித்தம்பி, வெண்ணிலா (இரகுநாதன்), எம்.எம்.ஸாலிஹ், வ.அ.இராசரத்தினம் ஆகியொர் எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61175).