11025 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு 1946-1948.

கோப்பாய் சிவம், செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

95ூ812ூ38 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 3000., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-50044-3-5.

மறுமலர்ச்சி ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை. 1946 ஆம் ஆண்டு பங்குனியில் முதல் இதழ் வெளியானது. மறுமலர்ச்சி எழுத்தாளர் தி. ச. வரதராசன் மறுமலர்ச்சி சங்கத்தினதும் மறுமலர்ச்சியினதும் மூலவர். 23 இதழ்களினதும் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். மறுமலர்ச்சி எழுத்தாளர் அ.செ. முருகானந்தன்  1வது இதழிலிருந்து 18ஆவது இதழ் வரை இணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரைத் தொடர்ந்து மறுமலர்ச்சிப் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா (கோப்பாய் சிவம் அவர்களின் தந்தை) அவர்கள் 18ஆவது இதழிலிருந்து 23ஆவது இதழ்வரை துணையாசிரியராகப் பணியாற்றியவர். கா. மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், க. இ. சரவணமுத்து ஆகியோரும் இணைந்து மறுமலர்ச்சிச் சஞ்சிகையை வளர்த்தெடுத்தார்கள். ஐப்பசி 1948 வரை 23 இதழ்கள் வெளியாகின. 23 இதழ்கள் மாத்திரம் வெளிவந்திருந்தாலும் மகாகவி, இலங்கையர்கோன், முதலிய இலக்கிய ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் பலரைப் பிரசவித்தமை மறுமலர்ச்சி மேற்கொண்ட சாதனை எனலாம்.

மறுமலர்ச்சியில் வெளிவந்த சிறுகதைகள் செங்கை ஆழியானால் தொகுக்கப்பட்டு மறுமலர்ச்சி சிறுகதைகள் எனப் பிரசுரமாகியுள்ளன. இதேபோல் மறுமலர்ச்சிக் கவிதைகளை செல்லத்துரை சுதர்சன் தொகுத்து வெளியிட்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பலரிடம் கைவசம் இருந்த மறுமலர்ச்சி இதழ்கள் கால வெள்ளத்தில் கரைந்து போக, கோப்பாய் சிவத்திடமே எல்லா இதழ்களும் பாதுகாப்பாக இருந்தன. இன்று அவை அவருடைய முயற்சியினாலும் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் செ சுதர்சனின் முயற்சியினாலும் 945 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61236).

ஏனைய பதிவுகள்

11953 உரிமைக்கும் உயர்வுக்கும்: பாராளுமன்ற உரைகள் 2010-2011.

முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை) xi, 172 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு:

13168 ஏழாலையம்பதி புங்கடி புவனேஸ்வரி அம்பாள் புனராவர்த்தன சம்புரோஷண மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2017.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). ஏழாலை: புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான தர்மபரிபாலன சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xii, 80 பக்கம், புகைப்படங்கள்,