11028 கிராமிய பூபாளம் 2016: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2016. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal).

52 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 26.5×18.5 சமீ.

புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனியில்  என்னெப்பெற்றால் பிரதேசத்தில் 1.10.2016 அன்று நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது  நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மேற்படி நற்பணி ஒன்றியத்தின் பல்வேறு தாயகப் பணிகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய நிகழ்வு அறிக்கைகளுடன், ஆசியுரைகள், கட்டுரைகள் என்பனவும் உள்ளடக்கப்பெற்று இம்மலர் வெளிவந்துள்ளது. புங்குடுதீவுப் பிரதேசம் பற்றிய தமது மனப்பதிவுகளைத் தாங்கிய பல புலம்பெயர்ந்தோரின் கட்டுரைகளை இம்மலரில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

16467 அரூப நிழல்கள்.

சங்கரி சிவகணேசன். யாழ்ப்பாணம்: சிவசங்கரி சிவகணேசன், ஈஸ்வரிபுரி, புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 120 பக்கம், விலை: ரூபா