11030 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 62,63வது ஆண்டு அறிக்கைகள் (2003-2005).

கொழும்புத் தமிழ்ச் சங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. 2003-2005 காலகட்டத்துக்கான இச்சங்கத்தின் ஆண்டறிக்கைகள் நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளராக ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் பணியாற்றினார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36547).

ஏனைய பதிவுகள்

12168 – முருகன் பாடல்: இரண்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).