திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டம், வெகுசன தொடர்புத்துறைப் பாடநெறிக்; குழு, மானிடவியல் சமூக விஞ்ஞானத்துறை, நாவல, 1வது பதிப்பு, 1992. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல).
(6), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20.5 சமீ.
திறந்த பல்கலைக்கழகம் நடத்தும் பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டத்திற்கான பாடவிதானத்துக்கமைய உருவாக்கப்பட்ட பாடநூல் இது. எது செய்தி?, இயங்கும் செய்தித்துறைக்கு இன்றியமையாதவை, பேச்சு, கூட்டம்ஈ பயிற்சிக் களம், மாநாடு, ஆகியவை பற்றிய செய்திகள், குற்றச் செயல்கள், வழக்கு விசாரணைகள் பற்றிய செய்தி, பத்திரிகை மாநாடுகள் அறிக்கைகள் சார்ந்த செய்தி, பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்தி, மாகாணச் செய்திகள், வானொலி தொலைக்காட்சி ஊடகச் செய்திகள், செய்தித்துறை ஊடகம் ஆகிய பத்துப் பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31434).