11033 செய்தித்துறை: செய்தித்துறைக்கு ஓர் அறிமுகம்.

திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டம், வெகுசன தொடர்புத்துறைப் பாடநெறிக்; குழு, மானிடவியல் சமூக விஞ்ஞானத்துறை, நாவல, 1வது பதிப்பு, 1992. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல).

(8), 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20.5 சமீ.

திறந்த பல்கலைக்கழகம் நடத்தும் பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டத்திற்கான பாடவிதானத்துக்கமைய உருவாக்கப்பட்ட பாடநூல் இது. செய்தித்துறை ஓர் அறிமுகம், செய்திகள், செய்திப் பத்திரிகை என்றால் என்ன, பத்திரிகையை உருவாக்குவோர், ஒலிபரப்புத் துறைக்கு ஓர் அறிமுகம், ஒலிபரப்பு ஊடகம், வானொலிச் செய்தி, செய்தித்துறையின் வளர்ச்சி ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31433).

ஏனைய பதிவுகள்