ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் பத்திரிகையியல் நிலையம், 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
xi, 212 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 24×18.5 சமீ.
சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விடயங்களையும் அறியவேண்டிய உரிமை மக்களுக்கு மறுக்கப்படுகின்ற வேளையில் அல்லது மறைக்கப்படுகின்ற வேளையில் புலனாய்வு அறிக்கையிடலுக்கான களமொன்று உருவாகின்றது. ஊடகவியலாளர்கள் மறைத்து வைக்கப்படும் விடயங்கள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள். தரப்படும் பதில்களின் உண்மைத் தன்மைகளை உறுதிப்படுத்துகின்றவிதமாகச் சான்றுகளைத் தேடி அலைகின்றார்கள். இதுவே புலனாய்வு அறிக்கையிடல் (Investigative Reporting) எனப்படும். இத்துறை பற்றிய விரிவான தகவல்களை ஊடகவியல்துறை மாணவர்களுக்காக 15 இயல்களில் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அவர்கள் இந்நூலில் வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13169).