சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 92 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-509-3.
இந்நூலில் இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது கட்டுரை ‘வட இலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1900-1915) வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளும் அவற்றினூடாக நாம் காணும் யாழ்ப்பாணமும்’ என்ற தலைப்பில் 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட ஆய்வுத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது கட்டுரை ‘சுதேச நாட்டியம் பத்திரிகையும் (1902-1915) கல்லடி வேலனும்’ என்ற தலைப்பில் ஏ.ஜே.கனகரத்தினா நினைவுப் பேருரையாக 2008ஆம் ஆண்டு வாசிக்கப்பட்டது. வட இலங்கை ஆரம்பகாலப் பத்திரிகைகள் பற்றிய ஆய்வாக இருந்தபோதிலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சமூக பொருளாதார கலாசார நிலைமைகளை வெளிக்காட்டும் ஆய்வாக இது அமைந்துள்ளது. நவீன வரலாற்றைத் தன் ஆய்வுப்புலமாகக் கொண்ட திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.