ஆர்.பிரபாகரன் (நாளிதழ் ஆசிரியர்), வீ.தேவராஜா (வாரமலர் ஆசிரியர்). கொழும்பு 14: வீரகேசரி, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 14: ENCL Commercial Printing Department எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
(14), 400 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 42×30 சமீ.
அமரர் பெ.பெரி.சுப்பிரமணியச் செட்டியார் அவர்களால் கொழும்பில் நிறுவப்பட்ட வீரகேசரி தனது முதலாவது இதழை 6.8.1930இல் ஆரம்பித்து வைத்தது. 80 ஆண்டுகள் கடந்த நிலையில் வீரகேசரியின் வரலாற்று முக்கியத்துவமான 400 இதழ்களின் முன் பக்கங்களின் புகைப்படப் பிரதி வடிவங்கள்; இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளள. தினப்பதிப்பின் முதல் இதழ் (மலர் 1. இதழ் 1) 8 பக்கங்களில் 5 சதத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதலாவது இதழ் முதல் 23.4.2010 (மலர் 80 இதழ் 220) வரையிலான 400 முதற் பக்கங்களும் இலங்கையின் பல வரலாற்றுத் தகவல்களையும் புகைப்படங்களையும் தாங்கி நிற்கின்றன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 171003).