ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன். கொழும்பு: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, டீ சில்வா வீதி, களுபோவில, தெகிவளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, டீ சில்வா வீதி, களுபோவில).
xvi, 120 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42230-0-4.
இலங்கை ஊடகவியல் வரலாற்றில் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியும் போக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள சூழலில், இந்நூல் தொலைக்காட்சியின் வரலாற்றையும், தொலைக்காட்சிசேவையில் ஈடுபட விரும்பும் இளையோருக்கான அறிவியல் தகவல்களையும் வழங்கும் கைநூலாக இதனை ஆக்கியிருக்கிறார். வெகுசனத் தொடர்பாடல், வெகுசனத் தொடர்பாடலின் வளர்ச்சி, இலங்கையில் காணொளி ஊடகங்களில் பண்பாட்டுப் பரவல், தொலைக்காட்சிச் செய்திப் படைப்பு, (தொலைக்காட்சி பற்றிய ஓர் அறிமுகம், தொலைக்காட்சி செய்தி, தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பில் பங்குபற்றுவோர், பணிக்கூறுகள், தொலைக்காட்சி செய்திச் சேகரிப்பு, தொலைக்காட்சி செய்தி எழுதுதல், தொலைக்காட்சி செய்திச் செம்மையாக்கல், தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பு), ஊடகங்களில் மகிழ்நெறி ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14364).