ப.மதனவாசன் (ஏ.பீ.மதன்). கொழும்பு 2: விஜயா பப்ளிக்கேஷன்ஸ், இல. 8, ஹூணுப்பிட்டி குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (மல்வானை: ஆர்.எஸ்.பிரின்டெக், இல.765/2, லேக் கிரசென்ட், வதுவேகம வீதி).
xvi, 288 பக்கம், கருத்தோவியங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-9067-20-7.
வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடான மித்திரன் நாளிதளுக்குப் பொறுப்பான உதவி ஆசிரியர் பணியை ஏற்று நான்காண்டுகளில் அப்பத்திரிகைக்குப் புதிய வடிவும் புது மெருகும் ஊட்டி மக்கள் மத்தியில் அதற்குச் சிறந்த வரவேற்பைப் பெற வைத்தவர் மதனவாசன். தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியராகத் தற்போது பணியாற்றுகின்றார். அவர் அண்மைக்காலத்தில் எழுதிய 100 ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பு இதுவாகும். ஈழத்தின் சமகால அரசியல் பொருளாதார நிலைமைகளை இக்கட்டுரைகள் சமூகப் பொறுப்புடன் பதிவுசெய்கின்றன.