இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
xii, 240 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-27-5.
உளவியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் அவர்கள் எழுதிய இந்நூல், வளர்ச்சிப் பருவக் கொள்கைகள், ஆளுமை இயங்கியற் கொள்கைகள் ஆகிய இரு பிரிவுகளாக விளக்கப்பட்டுள்ளது. முதற்பிரிவில் ஜோண் பொல்பியின் பற்றுறவுக் கொள்கை, எறிக் எறிக்சனின் உள-சமூகக் கொள்கை, சிக்மன் புரொய்டின் உள-பாலியல் வளர்ச்சிக் கொள்கை, ஜீன் பிஜாயேயின் அறிகை வளர்ச்சிக் கொள்கை, லெவ் விகொட்ஸ்கியின் அறிவு வளர்ச்சிக் கொள்கை, லோறன்ஸ் கொல்பேர்க்கின் நன்னெறி வளர்ச்சிக் கொள்கை, கறொல் கல்லிகானின் நன்னெறி வளர்ச்சிக் கொள்கை, ஜேம்ஸ் பௌலரின் ஆன்மீக வளர்ச்சிக் கொள்கை ஆகியன விளக்கப்பட்டுள்ளன. ஆளுமை இயங்கியல் கொள்கைகள் என்ற இரண்டாவது பிரிவில் சிக்மன்ட் புரொய்ட்டின் உள இயங்கியல் கொள்கை, கார்ள் யுங்கின் ஆளுமைக் கொள்கை, அல்பிறெட் ஆட்லரின் ஆளுமைக் கொள்கை, நடத்தையியலாளர்களின் ஆளுமைக் கொள்கை, அல்பேட் பண்டுறாவின் சமூக-உள ஆளுமைக் கொள்கை, மனிதாய உளவியலாளர்களின் ஆளுமைக் கொள்கை, ஆபிரஹாம் மாஸ்லோவின் தேவை அடுக்குக் கொள்கை, லூவிஸ் கோல்ட்பேர்க்கின் பண்பியல் கொள்கை ஆகிய விடயங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14366).