சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
viii, 72 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-041-3.
சமயம் மனித இருப்புடன் தொடர்புடையது. இதனால் நம்பிக்கைகளினதும் உலக நோக்கினதும் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதியாக சமயம் அமைந்துள்ளது. சமம் பற்றிய கோட்பாட்டுரீதியிலான புரிதலுக்கும் ஆய்வுக்கும் இந்நூல் களம் அமைக்கின்றது. சமய உளவியல், சமயத்தளம், விருத்தி உளவியல், சமய நடத்தை உளவியல், சமயமும் உளப்பாதுகாப்பும், சமய மொழியின் உளவியல், நாட்டார் உளவியல் நோக்கு, நாட்டார் சமயம், அருள் நிலையியல், தொன்மங்கள், சடங்குகள், வழிபாட்டு உளவியல், மனவெழுச்சியும் சமயமும், சமயக் கற்பனை, சமய ஓவியங்களின்; உளவியல், சமயக் கதைகளின் உளவியல், சமய ஆடலின் உளவியல், சமய இசையின் உளவியல், சமயஅறிவு, சமயமும் ஒழுக்கமும், சமயமும் சீர்மியமும், உளவியலும் இந்து சமயமும், பௌத்தமும் உளவியலும், இறையியலும் உளவியலும், மதமாற்றம், சமய அடிப்படைவாதம், நவீனத்துவமும் சமயமும், சமயமும் பின்னைய நவீனத்துவமும், சமயம் பற்றி மார்க்சியம், சமயமும் விஞ்ஞானமும், இறைமறுப்பு உளவியல், சமயம் கற்பித்தலின் நோக்கங்கள் ஆகிய 32 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60862).