சு.செல்லத்துரை. இளவாலை: சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×14 சமீ.
இளவாலை சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களின் நினைவு வெளியீடாக 30.07.2016 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர். நம்மைப்பற்றி நாம் அறியவேண்டும் என்பதையே சோக்கிரட்டீஸ் என்னும் கிரேக்க ஞானி ‘உன்னையே நீ அறிவாய்’ எனச் சொன்னதை நாம் அறிவோம். அவருக்கு முன்னமே திருமூலர் இக்கருத்தை ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரச் செய்யுள் வழியாகத் தமிழில் தெரிவித்திருக்கிறார். தன்னை அறிதல் பற்றி நம் சைவசித்தாந்த சாஸ்திரங்களும் திருமூலரை அடியொற்றி ஆழமாகவும் அகலமாகவும் இதனைச் சொல்கின்றன. அக்கருத்துகளை இலகுவாகத் தெளிவாக நாம் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இச்செய்தி கேள்வி-பதில் வடிவில் இந்நூலில் சுருக்கித் தரப்பட்டுள்ளது.