11049 இறந்தபின் எங்கள் நிலை: வினா-விடை.

சு.செல்லத்துரை. இளவாலை: சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×14 சமீ.

இளவாலை சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களின் நினைவு வெளியீடாக 30.07.2016 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர். நம்மைப்பற்றி நாம் அறியவேண்டும் என்பதையே சோக்கிரட்டீஸ் என்னும் கிரேக்க ஞானி ‘உன்னையே நீ அறிவாய்’ எனச் சொன்னதை நாம் அறிவோம். அவருக்கு முன்னமே திருமூலர் இக்கருத்தை ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரச் செய்யுள் வழியாகத் தமிழில் தெரிவித்திருக்கிறார். தன்னை அறிதல் பற்றி நம் சைவசித்தாந்த சாஸ்திரங்களும் திருமூலரை அடியொற்றி ஆழமாகவும் அகலமாகவும் இதனைச் சொல்கின்றன. அக்கருத்துகளை இலகுவாகத் தெளிவாக நாம் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இச்செய்தி கேள்வி-பதில் வடிவில் இந்நூலில் சுருக்கித் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9614 துயரம் சுமக்கும் தோழர்களாய்: கவிதைத் தொகுப்பு.

குறிஞ்சிவாணன். திருக்கோவில்: வி.பி.எம்.வெளியீட்டகம், பிரதான வீதி, சாகாமம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்). 88 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 18×12.5 சமீ. தென்கிழக்கிலிருந்து  வெளிவந்துள்ள இந்நூலை

12495 – மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி: நாற்பதாண்டு நிறைவுச் சிறப்பு மலர் 1959-1999.

எஸ்.யூ. சந்திரகுமாரன் (மலராசிரியர்). மன்னார்: சித்தி விநாயகர் இந்தக் கல்லூரி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21