றவூப் ஸெய்ன். திஹாரிய: Centre for Development Studies, CDS 188/12, கண்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
vi, 94 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0932-07-8.
Psychology of family Life என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளிவந்துள்ள இந்நூல், சிறந்த குடும்ப வாழ்விற்கான திட்டமிடல், தீர்வுகள், மகிழ்ச்சிக்கான வழிகள் குறித்த உளவியல் கையேடாக மலர்ந்துள்ளது. திருமணத்திற்கு முந்திய உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட குடும்ப வாழ்வின் அனைத்துப் பரிமாணங்கள், பிரச்சினைகள், தீர்வுகள் என்பவற்றினை உளவியல் ரீதியில் அணுகும் ஒரு முயற்சியாக இந்நூல் அமைகின்றது. குடும்ப வாழ்வின் உளவியல், திருமணம்; இலக்குகளும் குறிக்கோள்களும், திருமணத்திற்கு முந்திய வழிகாட்டல்களும் உளவியல் ஆலோசனைகளும், திருமணத்திற்கு முந்திய காதல், ஆண்-பெண் பொருத்தப்பாடு ஓர் உளவியல் அணுகல், தம்பதியினர் உறவு, குடும்ப வாழ்வில் அன்பின் பாத்திரம், கணவன் மனைவி தொடர்பாடல், குடும்ப வாழ்வில் பொருளாதாரம், மண வாழ்வில் தாம்பத்தியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள், குடும்ப வகைகளும் உள ஆரோக்கியமும், குடும்ப வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகள் முகாமை செய்வது எப்படி? ஆகிய தலைப்புகளின்கீழ் இங்கு குடும்ப வாழ்வின் உளவியல் ஆராயப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49730).