ஷேக் ஹசன் அஸ்ஹரீ. கண்டி: இஸ்ஸத் பதிப்பகம், 67, லேடிமக்கலம் டிரைவ், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xx, 21-320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ., ISBN: 955-8782-00-9.
இஸ்லாமிய மார்க்க அறிஞரான நூலாசிரியர் இந்நூலை 105 பகுதிகளாகப் பிரித்து வாழ்வியல் உண்மைகளை நயமாகவும், நியாயமாகவும் தொகுத்தும் பகுத்தும் எழுதியிருக்கிறார். தமிழ், அரபு, ஆங்கிலம், சிங்களம் முதலான மொழிகளில் உள்ள தத்துவக் கருத்துக்களைப் பகுத்தும் தொகுத்தும் இன்றைய அறிவியல் யுகத்திற்கு ஏற்றவகையில் நகைச்சுவைகலந்து சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். மனத்தெளிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சமூகத்தின் மீதான புதிய பார்வை, தன்முனைப்பு மற்றும் புத்துணர்வு தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. வாழ்க்கையில் வெற்றிபெற வழிதேடுவோருக்கு இந்நூல் நல்லதொரு சுயமுன்னேற்றக் கருத்துக்களைத் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45301).