11056 மாதா பிதா குரு தெய்வம்.

நா.சோமாஸ்கந்தக் குருக்கள். கொழும்பு: Modern Hindu Cultural Art Works, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13:  யுனிலங்காஸ் 32, சென் அன்ரனீஸ் மாவத்தை).

iv, 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

கலாநிதி நா.சோமாஸ்கந்தக் குருக்கள், அவுஸ்திரேலியத் திருமணப் பதிவாளராகவும், சர்வதேச இந்துமத குருபீட அவுஸ்திரேலியப் பிரதிநிதியாகவும் பணியாற்றுபவர். தாய் தந்தையரின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் பத்துக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. புகலிட தேசங்களில் இளந் தலைமுறையினரிடையே பெற்றோரியம் பற்றிய அறிதலையும் புரிதலையும் வளர்க்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் தயாரித்து வெளியிடப்பெற்ற இந்நூல் இன்று தாயகத்திலும் பயன்படுத்தப்படவேண்டிய  தேவையை உணர்த்துகின்றது. இதில் உள்ள கட்டுரைகள், தாய் தந்தையர்களே முதல் தெய்வம், குருவின் மகிமை, குருவின் உபதேசம், குருவை நம்பிய பால்காரி, குருவை மிஞ்சிய சீடன், அயோத சௌம்மியர், ஆலய வழிபாட்டின் அவசியம், உலகத்தின் தாய் தந்தையர், அரனை மறவேல், அன்பே இன்பம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12458 – கமலமலர்: பவளவிழா சிறப்பு மலர் 2011.

ஆ.பேரின்பநாதன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பவளவிழா மலர்க்குழு, யாஃபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம், புங்குடுதீவு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxvi, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,