செ.யோசப் பாலா. யாழ்ப்பாணம்: மணிஓசை வெளியீட்டகம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: நோபல் அச்சகம், 187, வைத்தியசாலை வீதி).
viii, 198 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1630-01-0.
உள சமூகப் பணியில் ஈடுபடுவோருக்கும், குடும்ப சமூக உறவை மாண்புடன் கட்டியெழுப்பமுனைவோருக்கும் வழிகாட்டியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் மனக்காயங்களைப் போக்கவல்ல அரிய கட்டுரைகள் 48 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கிய வாழவு என்பது, உளத்தை ஆளும் வல்லமை, மௌனத்தின் மொழி புரிகின்றதா? எம் உணர்வுகளை உணர்வோமா? வாழ்வின் வெற்றிப்படி, மனம் ஆற மனம் வேண்டும். தப்பித்தல் தீர்வாகுமா? வேற்றுமையில் ஒற்றுமை ஆரோக்கிய உறவு, மகிழ்வூட்டி மகிழ்வடைதல், உணர்வுகளின் ஊற்றுக்கள், உடல் உள சொத்து உங்களிடம் உண்டா? ஆற்றுப்படுத்தலில் மகிழ்ச்சி காண, வாழ்வின் இலக்கு எது? தடைகளைத் தாண்ட வழி? உருவாக்கத்தின் தவறுகள், நல்வாழ்வுக்கு வழிகாண, பொறுப்புக்களை ஏற்போமா? வாழ்வின் மகிழ்விற்கு, வாழ்வில் இசைவாக்கம், தன்னிலை மறந்தவரா நீங்கள்?, தேடலும் தெரிவும், எண்ணங்கள் உயர்வானால், பணிவு இருக்கும் இடத்தில், உன்னுள் உன்னைக் காண, இலக்கு நோக்கி, விளையாட்டு விளையாட்டாக, தவறகளைத் தவிர்ப்போம், ஏமாற்றத்தை வெல்ல, அனுபவம் ஒரு திருப்புமுனை, பிஞ்சு மனங்களில் நஞ்சு விதைகளா? அனுதாப அவலம், உணர்வுகள் வெளிப்பட, குதூகலமாய் வாழ, அனுபவம் ஒரு பாடம், கலைகளின் செல்வாக்கு, பார்வைகள் தரும் பதிவுகள், விடலைகளின் விசும்பல், மாலையும் மகிழ்ச்சியும், அமைதியின் சின்னங்கள், மனிதநேய காப்பரண், எதிர்கொள்ளலுக்கு நாம் தயாரா? சுயத்தை அறிதல், உங்கள் தொடர்பாடல் எப்படி? உங்கள் வாழ்வு வரலாறாகுமா? ஒரு வார்த்தை அது போதும், தூண்டியாய் செயற்படுங்கள், இருளகற்றும் ஒளிகளா நீங்கள்? மனித மாண்புகள் உயிர்ப்படைய ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14325).