கோகிலா மகேந்திரன், ஜெகநாதன் தற்பரன், யூடி ஜெயக்குமார் (இணை அசிரியர்கள்), இர.சந்திரசேகர சர்மா(இணைப்பாளர்). யாழ்ப்பாணம்: சாந்திகம், 8, 8/1, கற்பக விநாயகர் ஒழுங்கை, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் நிறுவனம், இல. 681, காங்கேசன்துறை வீதி).
(4), 60 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0520-02-2.
வடக்கிலும் கிழக்கிலுமுள்ள NCPA உள சமூக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான உளவளத்துணை பற்றிய பயிற்சி 12.12.2014 அன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் 42 NCPA உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு மட்டக்களப்பிலும் 15.12.2015 அன்று நடைபெற்றபோது 39 NCPA உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர். பயிற்சிகளை நடத்திய வளவாளர்களின் கருத்துக்கள் கட்டுரை வடிவில் அவர்களைக்கொண்டே எழுதுவிக்கப்பட்டு இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இச்சிறுநூல் எதிர்கால வளவாளர்களுக்கும் NஊPயு உத்தியோகத்தர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் சம்பந்தமான விடயங்களில் அக்கறை கொண்ட ஏனையோருக்கும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கோகிலா மகேந்திரன் எழுதிய ‘சிறுவர் பாதுகாப்பு’, ஜெகநாதன் தற்பரன் எழுதிய ‘சிறுவர் பாதுகாப்பு சம்பவங்களின் முகாமைத்துவ பயிற்சிகள்- இலங்கை’, யூடி ஜெயக்குமார் எழுதிய ‘கட்டிளமைப் பருவம்’ ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 247781).