11065 அளவையியலும் விஞ்ஞானமுறையும்-1.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், கோபிகா பதிப்பகம், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிறின்டேர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

viii, (8), 384 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 21×14 சமீ.

இந்நூலில் அளவையியலின் தன்மையும் விடயமும், அளவையியல் தத்துவங்கள் பற்றிய பொதுவான ஆய்வு, சிந்தனை விதிகள், எடுப்புக்கள், உடன் அனுமானம், ஊடக அனுமானம், வகுப்பு அளவையியல், நுண்கணித வாக்கியம், வாக்கியங்களையும் வாதங்களையும் குறியீட்டாக்கம் செய்தல், பெறுகை முறைகள், உண்மையட்டவணை முறை, தர்க்கரீதியான சிந்தனை பற்றிய கல்வி, ஆகிய 12 அத்தியாயங்களையும் சிறு குறிப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய நூல். வெள்ளவத்தை, இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியரான கேசவன், சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி, மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றியவர்;. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்- 7475). 

ஏனைய பதிவுகள்