எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, பங்குனி 2003. (யாழ்ப்பாணம்: ஐங்கரன் கிரபிக்ஸ், பிரதான வீதி, சித்தன்கேணி).
64 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×13.5 சமீ.
அளவையியலும் விஞ்ஞானமுறையும் இரு பாகங்களுக்குமான பின்னிணைப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்னும் பாடத்தைக் கற்கும் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டத்திற்கேற்ப வினா-விடை அமைப்பு வடிவில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பகுதிக்கும் கீழே கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் இடம்பெற்றுள்ளன. தேவையான இடங்களில் விடைக்குறிப்புகளும் காணப்படுகின்றன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்- 7501).