க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
157 பக்கம், விலை: ரூபா 185., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98605-2-6.
இந்நூல் விஞ்ஞானிகளும் விஞ்ஞான முறையியலாளர்களும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆகிய இரு பெரும் பிரிவுகளின்கீழ் ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பிரிவில் கட்டுரைக் குறிப்புகளும் நான்காவது பிரிவில் பொதுவான குறிப்புகளும் ஒழுக்கவியலும் என்ற பகுதியும் ஐந்தாவது பிரிவில் விஞ்ஞானத்தின் வரலாற்றுச் சுருக்கமும் காணப்படுகின்றன. வெள்ளவத்தை, இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியரான கேசவதாசன், சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி, மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றியவர்;. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர். 8908).