ச.விஜயலக்சுமி. பருத்தித்துறை: ச.விஜயலக்சுமி, லக்சுமி வெளியீடு, ஆசிரியை, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஆடி 1982. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(6), 82 பக்கம், விலை: ரூபா 13.50, அளவு: 21×14 சமீ.
இந்நூலில் இயன்றவரை க.பொ.த. உயர்தர மாணவர்களின் அளவையியலும் விஞ்ஞான முறைகளும் பாடத்தின் வினாத்தாள் 2இன் பகுதி 3இற்கான விஞ்ஞானிகளின் விபரங்களையும் கண்டுபிடிப்புகளையும் விபரமாகக் கூறியிருப்பதோடு மாதிரி வினாத்தாள், கடந்தகால வினாத்தாள் ஆகிய இரண்டையும் உயர்தர மாணவர் நலன்கருதிச் சேர்த்துமுள்ளார். மாணவர்கள் இந்நூலில் கூறப்பட்ட விஞ்ஞானிகளின் தர்க்கரீதியான சிந்தனைகளையும் அது அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வாறு வழிவகுத்திருக்கின்றது என்பதையும் தர்க்கரீதியில் சிந்தித்து அதன்மூலம் தமது அறிவையும் ஆர்வத்தையும் பெற்றுப் பயனடைய முடிகின்றது. அவ்வகையில், ஆக்கிமிடீஸ், கிளோடியஸ் தொலமி, நிக்கலஸ் கொப்பனிக்கஸ், ரைக்கோ டி பிராகே, கிப்பாக்கஸ், கெப்லர், கலிலியோ கலிலி, வில்லியம் ஹார்வி, சேர் ஐசாக் நியூட்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், லாப்லாஸ், சேர் ஹம்பரி டேவி, யுரேனசின் கண்டுபிடிப்பு, மைக்கல் பாரடே, டோல்ட்ரனது அணுக்கொள்கை, சார்ள்ஸ் டார்வின், ஜே.எஸ்.மில், லூயி பாஸ்டர், நோபெல் அல்பிரட், நெப்டியூனின் கண்டுபிடிப்பு, புளுற்றோவின் கண்டுபிடிப்பு, அலெக்சாண்டர் கிரகம்பெல், தோமஸ் அல்வா எடிசன், சிக்மண்ட் புரொய்ட், ஜோசெப் தாம்சன், ரூடால்ப் டீசல், மேரி கியூரி அம்மையார், மார்க்கோனி, அல்பெர்ட் ஐன்ஸ்ரைன், அலெக்சாண்டர் பிளெமிங், சேர். சி.வி.இராமன், ஆகிய 31 தலைப்புகளில் விஞ்ஞானிகளும் அவர்களது கண்டுபிடிப்புகளும் விபரிக்கப்பட்டுள்ளன. 32ஆவது இயலில் மாதிரி வினாத்தாள்களும் கடந்த வருட வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2112).