11074 விஞ்ஞானிகளும் விஞ்ஞான முறையியலாளர்களும்.

இ.ஜெயசுதர்சன். அச்சுவேலி: இ.ஜெயசுதர்சன், 1வது பதிப்பு, ஜுன் 2001. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற் கொம்பியூட்டர் பிரின்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).

(3), 90 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 20×14.5 சமீ.

க.பொ.த. உயர்தர, ஜீ ஏ க்யு வகுப்புகளில் அளவையியலை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களின் தேவைகருதி எழுதப்பட்டுள்ள நூல். விஞ்ஞானமுறையின் வளர்ச்சியையும் அதன் பிரயோகத்தையும் விஞ்ஞானிகள் பற்றியும் அவர்களது கண்டுபிடிப்புகள் பற்றியும் அறிய இந்நூல் வழியமைக்கின்றது. இந்தியா, கிரேக்கம், பிரான்ஸ், ஆங்கிலேயம், ஜேர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, டென்மார்க், இங்கிலாந்து, ஏனைய நாடுகள் என நாடுகள் வாரியாகப் பிரிக்கப்பட்டு அந்நாட்டு விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களை இந்நூல் வழங்குகின்றது.  இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர். 7640). 

ஏனைய பதிவுகள்